திருநெல்வேலி மாவட்டம் அருகே கோடன்குளம் கிராமத்தில் காலையிலும் சேராத, மதியத்திலும் சேராத ஒரு பகல் பொழுதில்.முன்று பேர் தீட்டப்பட்ட அரிவாளுடன் வருகின்றனர். கரை ஓரங்களில் வானத்தை முட்டினாற்போல வளர்ந்து நிற்கும் பனை மரங்களை நோட்டம் இடுகிறது அந்தக் கும்பல்.
'எலேய்! தெரியுமுல்ல... நான் ஏறி இறங்குற வரைக்கும் யாரும் கீழ விழுந்த குலையைத் தொடக் கூடாது. அப்படிச் செஞ்சீங்கன்னா என் உசுருக்கு ஆபத்தாயிடும். நீங்க எல்லோரும் மாட்டிக்குவீங்க'' எச்சரித்தவாறே மரத்தில் ஏறத் தயாராகிறான் ஒருவன்
''சரி மாப்ள... நீ ஏறு. நல்ல நுங்கு உள்ள குலையாப் பார்த்து வெட்டிப் போடு. நாங்க ஒரே இடத்துல குவிச்சு வைக்கிறோம். பார்த்து ஏறுல'
- கோரஸாகக் குரல் கொடுக்கின்றனர் மற்றவர்கள்.
கைலியை மடித்து சுருக்குப் போட்டுக்கொண்டு, அரிவாளை லாகவமாக இடுப்பில் சொருகியவாறு மரத்தை இறுகப் பற்றிக்கொண்டு ஏற ஆரம்பிக்கிறான்.
சில நிமிடங்கள் கழிகின்றன.
பனை மரத்தின் உச்சியில் நிழல் ஆடுகிறது. காய்ந்த மட்டைகள் வரிசையாகக் கீழே விழுகின்றன. இளநுங்குக் குலைகள் கீழே விழுகின்றன. நுங்குகள் சிதறி ஓடுகின்றன. கீழே நிற்பவர்கள் அவற்றைச் சேகரிக் கின்றனர். ஏழு, எட்டு குலைகள் சேர்ந்த நிலையில், ''போதும்ல மாப்புள்ள... இறங்கி வா...'' என்று கீழே இருந்து மேலே குரல் போகிறது.
பனங்காய்களின் தலைகள் சீவப் படுகின்றன. எல்லோருடைய கட்டை விரல்களும் இப்போது நுங்கு சுளை களுக்குள். போதும் போதும் என்கிற அளவுக்கு உள்ளே போனதும், மிச்சம் கிடந்த குலைகளைத் தோள்களிலும் தலையிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறது அந்தக் கோஷ்டி!
Saturday, 16 March 2013
கள்ள நுங்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment