இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி.
திருநெல்வேலி அருவாளுக்கு மட்டும் அல்ல அன்பிற்கும் அல்வாவிற்கும் பெயர் பெற்றது.
'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.
திருநெல்வேலி. இது வீரமான மட்டுமல்ல, ஈரமான ஊரும் கூட. "வாங்க அண்ணாச்சி. சவுக்கியமா இருக்கியளா? இருந்து சாப்டுட்டுத்தான் போணும்" என அன்புக்கட்டளையிடும் மக்கள் நிறைந்த ஊர்.
வற்றாத தாமிரபரணி நதிக்கரையில் வாடாமல்லியாக பூத்து நிற்கும் திருநெல்வேலி, அந்தக்காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலை நகராகவும் மணம் வீசியது. சுமார் 2ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருநெல்வேலி சீமையில் பார்த்து ரசிக்க குற்றாலம் பாபநாசம் மணிமுத்தாறு கூந்தன்குளம் முண்டந்துரை மாஞ்சோலை என பல இடங்கள் உண்டு.""
No comments:
Post a Comment